இந்த செய்தி அறிவியல் புனைவு திரைப்படங்கள் போல தோன்றலாம். ஆனால் இது உண்மையில் நடந்துள் ளது. சைபீரியாவில் நிரந்தர உறைபனியில் 46000 ஆண்டு களுக்கு முன் ஆழத்தில் புதைக்கப்பட்ட இரண்டு உருண்டைப் புழுக்களை அறிவியலாளர்கள் உயிர்ப்பித்துள்ளனர். நெமடோட்ஸ் எனப்படும் இந்தப் புழுக்களை சோதனைச்சாலை யில் இளகவைத்ததுடன் உயிருடன் எழுந்து பல தலைமுறை களை உண்டாக்கி பின் மடிந்தன. உரோம மாமூத் விலங்கினங் கள் வாழ்ந்த காலத்தை சேர்ந்த இவை கடுமையான உறைநிலை சூழலையும் சமாளித்து பிழைத்திருந்தன. பின்னர் கிரிப்டோப யோசிஸ் எனப்படும் தூக்க நிலைக்கு சென்றன. உயிரானது பல வருடங்களுக்கு ஓய்வுநிலைக்கு சென்று பின்னர் மீண்டும் தொடங்க முடியும் என்று இதற்குப் பொருளா? உயிரினங்கள் வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட நிலையில் முடிவில்லாமல் இருக்க முடியுமா? சைபீரியன் உறைபனி இளகுவதால் இதைப்போலவே மற்ற நுண் உயிரினங்களும் கிருமிகளும் இந்தப் புழுக்களை போல உயிருடன் வர முடியுமா?அவை புதிய நோய்களை உருவாக்குமா என்ற கேள்விகளை இது எழுப்புகின்றது. இது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் அறிவியல் இதழான PLOS Genetics எனும் இதழில் வந்துள்ளது.